என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பந்து வீச்சு
நீங்கள் தேடியது "பந்து வீச்சு"
இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும் என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், பந்தை அடிக்காமல் வெளியே விடும் யுக்தியை நீண்ட நேரம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.
எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. தற்போது 1-3 என்ற கணக்கில் பின்தங்கி நிற்கிறோம். தொடரை உயர்ந்த நிலையில் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 3-2 என்ற கணக்கில் முடித்தால் உண்மையிலேயே அது சிறப்பாக இருக்கும்’ என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane
×

X